முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதி நளினி தனது மகள் திருமணத்தை நடத்த சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து ஒரு மாதம் பரோல் பெற்றார்.இன்று 26-ம் தேதி காலையில் பரோலில் வெளியில் வந்தார்.வேலூர் ரங்காபுரத்தில் திராவிடர் இயக்க தமிழர் பேரவை சிங்கராயர் வீட்டில் தங்கி உள்ளார்.இந்த ஒரு மாதத்தில் தனது மகளின் திருமணத்தை நடத்துவார்.இப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.


You must be logged in to post a comment.