ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே முத்துவயல் கிராம அல் மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜூம்மா பள்ளியின் வளாகத்தில் ஜமாஅத் தலைவர் S.அஜ்மல் கான் தலைமையில் சுலைமான் , ஆமீர் கான் , பிலால் பீர் முகம்மது , ஹபீப் ரகுமான் , சீதக்காதி , முகம்மது அமின் , அப்துல் மாலிக் , அப்துல்லா ஆகையால் முன்னிலையில் சமத்துவ இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்ஸலுல் உலமா, மௌலானா மௌலவி முஹம்மது அனீஸ் முனீரி, பாஜில் ஸஹாரன்பூரி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் S.முருகேசன் , நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சந்திர பிரபா ஜெயபாலன் , போகலூர் ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் கதிரவன் , விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் பெருப்பாளர் முகம்மது யாசின் , இந்திய தேசிய காங்கிஸ் கட்சி போகலூர் வட்டாரத்தலைவர் முனிஸ்வரன் , முத்துவயல் ஊராட்சி மன்றத் தலைவர் ரவி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சபரிவேனி சரவணன் , நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலளர் காமராஜ் செல்லத்துரை , தமிழ் புலிகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் ராஜா , CBI (M) மாவட்ட செயல் குழு உறுப்பினர் ராஜ்குமார் , தேருவேலி ஓய்வு ஆசிரியர் முஸ்தபா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். முத்துவயல் மற்றும் பொட்டகவயல் முஸ்ஸீம் ஜமாத்தார்கள் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்





You must be logged in to post a comment.