சட்டமன்ற தேர்தலில் முத்தரையர் சமூகத்தை அரசியல் கட்சிகள் புறக்கணித்து வருகிறது.தற்சமயம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் எங்களது கோரிக்கைகளை ஏற்ற கொள்ளும் கட்சிகளுக்கு எங்களது ஆதரவு என முகவை சேகர் கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
சுதந்திர இந்தியாவில் 70 ஆண்டுகால அரசியலில் புறந்தள்ளப்பட்ட முத்தரையர்களுக்கு இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் வாய்ப்பு வழங்கும் அரசியல் கட்சிக்கே ஆதரவு, வாய்ப்பு வழங்காத பட்சத்தில் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் முத்தரையர் சமுதாய வேட்பாளரை சங்கத்தின் சார்பில் தனித்து களம் காண வைப்பது, ராமநாதபுரம் மாவட்டத்தில் எட்டாக்கனியாக இருக்கக்கூடிய மாவட்டச் செயலாளர் பதவியை முத்தரையர்களுக்கு வழங்கிட அனைத்து கட்சிகளையும் கேட்டுக்கொள்கிறோம்.
மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் முழு திருவுருவ வெண்கல சிலை அமைத்துத்தர தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். வலையர்களின் நீண்டநாள் கோரிக்கையின வலையர் புனரமைப்பு வாரியத்தை விரைந்து அமைத்திட கேட்டுக்கொள்கிறோம்.
ஜாதிவாரி கணக்கெடுப்பிற்காக அமைக்கப்பட்ட ஆணையத்தில் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு முக்கிய பொறுப்பு வழங்கிட தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
தமிழகம் முழுவதும் 29 பட்ட பெயர்களில் வாழ்கிற முத்தரையர்களை ஒருங்கிணைத்து ஒற்றை பட்டியலில் 15% தனி இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம் என கூறினார்.
கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு


You must be logged in to post a comment.