தி.மலை மாவட்டம் செங்கம் அடுத்த அந்தனூர் பகுதியில் வந்தடைந்த முத்தமிழ்
3தேரானது கன்னியாகுமரியில் தொடங்கி சென்னையில் நிறைவடைகிறது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவின் பேரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி ஆலோசனை பேரில், மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ் தலைமையில் முத்தமிழ்த்தோ் எனும் அலங்கார பேனா ஊா்திக்கு பள்ளி மாணவ மாணவிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அந்தனூர் அரசினர் உயர்நிலைப்பள்ளி சாரண ஆசிரியர் செந்தமிழ் செல்வன் ஒருங்கிணைப்போடு சாரண மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தியுடன் 20 கிலோமீட்டர் தொலைவு வரையில் பயணம் மேற்கொண்டனர் நிகழ்வில் பள்ளி துணை ஆய்வாளர் குணசேகரன், செந்தில் , பள்ளி தலைமை ஆசிரியர் பாரதி, ஆசிரியர்கள் மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்


You must be logged in to post a comment.