ரம்ஜான் பண்டிகை: ராமநாதபுரத்தில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..!
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று பிறை தென்பட்டதால் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை ஹாஜி அறிவித்திருந்தார். அதன்படி இன்று நாடு முழுக்க ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக சிறப்புத் தொழுகை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதில் ஒரு கட்டமாக, ராமநாதபுரம் கீழக்கரை புதுமடம் உட்பட மாவட்டத்திலுள்ள அனைத்து ஊர்களிலும் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு இன்று அதிகாலையில் இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து ஈத்கா திடலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பு தொழுகை நடத்தினர். தொழுகை முடிந்த பின்னர் சிறுவர் முதல் பெரியோர் வரை ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி ரமலான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.












You must be logged in to post a comment.