கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் இஸ்லாமியர்களின் புனித ரமலான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது
இஸ்லாமியர்களின் மிக புனிதமான மாதமாக ரமலான் இருக்கிறது. இஸ்லாமிய நாட்காட்டியின் 9-வது மாதமாகும். இது ரமலான் என்றும் ரம்ஜான் என்றும் அழைக்கப்படுகிறது
இந்த மாதத்தில், இஸ்லாமியர்கள் தங்களது கடமைகளில் ஒன்றான நோன்பு இருப்பது வழக்கமாகும்.
ரம்ஜான் பண்டிகையானது, இந்த மாதத்தில் வானில் தோன்றும் பிறையின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பிறை தென்பட்டதை தொடர்ந்து ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது
மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாஅத் தலைமையில் ஒன்று கூடிய 24 பள்ளிவாசல்கள் ஒன்றிணைந்து ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடத்தினர், இத்தொழுகையில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கு பெற்றனர், மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாத் மற்றும் ஜமாத்தார்கள் தொழுகைக்கு வருபவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர் மேலும் சிறப்பாக மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் வாகன நெரிசல் இல்லாமல் பொது மக்களுக்கு பாதுகாப்பு மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்தனர் …

You must be logged in to post a comment.