‘ஏப்ரல் 8’- சென்னை கிரஸண்ட் கல்லூரியில் நடைபெற இருக்கும் ‘முஸ்லீம் மாணவர்கள் சந்திப்பு’ நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு

இஸ்லாமிய மாணவர்களுக்கான மாபெரும் நிகழ்ச்சியாக ‘MUSLIM STUDENTS MEET’ என்கிற பெயரில் எதிர்வரும் ‘ஏப்ரல் 8’ அன்று சென்னை CRESCENT B.S.ABDUR RAHMAN பல்கலைக்கழகத்தின் உள் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளும் விதமாக உருவாக்கம் செய்யப்பட்டு இருக்கும் இந்நிகழ்ச்சிக்கான அழைப்பு தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

கல்வியில் உயர்வடைதல், தொழில் முனைவோர்களை உருவாக்குதல், ஊடகத் துறையில் மேம்பாடு அடைதல், இஸ்லாமிய மார்க்க அழைப்பில் முன்னேறுதல் உள்ளிட்ட சிறப்பான அடிப்படை கருத்து உருவாக்கங்களோடு இளைய சமுதாயத்தினருக்கு ஒற்றுமையின் வலிமையை வலியுறுத்தி இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் தலை சிறந்த ஆளுமைகள் பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர்.

இந்நிகழ்ச்சி முஸ்லீம் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் மாற்று சமுதாய சகோதரர்களும் பங்கேற்கும் விதமாக திட்டமிடப்பட்டு உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முன் பதிவு அவசியம்.

கீழ் காணும் வலை தள முகவரியில் லிங்கினை சொடுக்கி மாணவர்கள் முன் பதிவு செய்து கொள்ளலாம்.

http://www.muslimstudentsmeet.in

http://www.muslimstudentsmeet.in

http://www.muslimstudentsmeet.in

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!