மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியை அடுத்துள்ள புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சின்னராஜ்(40) மனைவி ரவீனா(27). பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக உள்ளார்.இவர்களுக்கு ஏற்கனவே 2 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவதாக ரவீனா கருத்தரித்து தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்., திருமணம் முடிந்த காலம் முதல் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தாகவும், செக்காணூரணி – உசிலம்பட்டி மகளீர் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டு விசாரணைக்கு பின் சமரசம் ஏற்பட்டு சமீப காலமாக தான் கணவன் மனைவி ஒன்றாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று காலை கணவன் சின்னராஜ் வழக்கம் போல கூலி வேலைக்கு சென்றுவிட கர்ப்பிணியான ரவீனா வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு செக்காணூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளனர்.அங்கு ரவீனாவை பரிசோதித்த மருத்துவர்கள் ரவீனா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.தகவலறிந்து விரைந்து வந்த செக்காணூரணி காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக ரவீனாவின் தந்தை ராஜா அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் ரவீனாவின் இறப்பிற்கு காரணமான சின்னராஜா குடும்பத்தாரே காரணமென்றும் அவர்கள் அடித்துக் கொன்று விட்டதாகவும் குற்றஞ்சாட்டி அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி ரவீனாவின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து உசிலம்;பட்டி ஆர்டிஒ அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

You must be logged in to post a comment.