வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை செங்காடு பகுதியை சேர்ந்த சுகுணா ராணிப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் எதிரே கத்தியால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சுகுணா கணவர் இறந்துவிட்டார் அதனால் சுகுணா வாங்கூர் பகுதியை சேர்ந்த சுரேந்திரனுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பு ஏற்ப்பட்டு உள்ளது.
போலீசாரின் முதற் கட்ட விசாரணையில் நேற்று சுரேந்திரன் சுகுணா விடம் குடிப்பதற்கு 1000 ரூபாய் கேட்டு உள்ளார் அதைனை கொடுக்க மறுத்த சுகுணாவை செங்கல் கொண்டு தாக்கி உள்ளார். அதனை தொடர்ந்து இன்று சுகுணா ராணிப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் சுரேந்தர் மீது புகார் கொடுக்க வந்துள்ளார் இதனை அறிந்த சுரேந்திரன் இருசக்கர வாகனத்தில் வந்து காவல் நிலைய எதிரே சுகுணா வை கத்தியை கொண்டு சரமாறியாக வெட்டியுள்ள நிலைகுலைந்து போன சுகுணா சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சடலத்தை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது இது குறித்து ராணிப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது சம்பவயிடத்தில் ராணிப்பேட்டை டி எஸ் பி கலைச்செல்வன் விசாரணை நடத்தி வருகிறார்..

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










