அலங்காநல்லூர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் வெட்டிக் கொலை…. உடன் சென்ற பெண்ணுக்கு வெட்டு..

அலங்காநல்லூர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவரை, 6பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததுள்ளது.  அவருடன் சென்ற அவரது சித்திக்கும் சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது.

அலங்காநல்லூர் காவல் நிலைய சரகம் கல்லணை நேரு தெரு, நேதாஜி நகர் என்ற முகவரியில் வாடகைக்கு குடியிருந்து வரும் ரவிச்சந்திரன் என்பவரது மகன் விக்கி என்ற விக்னேஷ் ( 24). இவரும் இவரது சித்தி ஜமுனா என்பவரும், மதுரை அருகே உள்ள சிக்கந்தர்சாவடியில் உறவினரின் வீட்டு விசேஷத்திற்கு இன்று காலையில் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது கல்லணை என்ற இடத்தில் உள்ள இண்டேன் கேஸ் குடோன் அருகில் மூன்று இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவரையும் சரமாரி அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர். சம்பவ இடத்திலேயே விக்னேஷ் உயிரிழந்து விட்டார். ஜமுனா உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

இது முன் விரோதம் காரணமாக நடந்ததா, என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!