விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள நாரனாபுரத்தை சேர்ந்தவர் விக்ணேஷ்குமார் (30) இவருக்கு அதே பகுதியில் உள்ள எம்.துரைச்சாமிபுரத்தை சேர்ந்த தனலட்சுமி (26) என்பவருக்கும் திருணம் ஆகி தற்போது கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த மாதம் தனலட்சுமி (26) சாத்தூர் அருகே உள்ள படந்தால் கிராமத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். அங்கு திருத்தங்கல்லை சேர்ந்த சதீஷ் (26) அடிக்கடி வந்து சென்றுள்ளார். இரண்டு தினங்களுக்கு முன்பு சதீஷ்குமார் இறந்து விட்டதாக தனலட்சுமி, அவரின் உறவினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் காவல்துறையின் விசாரனையில் கள்ளகாதலன் சதீஷ்குமாரை கணவன் கல்லால் தாக்கி கொலைசெய்ததாக தெரிவித்துள்ளார். சாத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து திருத்தாங்கல்லி இருந்த உடலை கைப்பற்றி சாத்தூர் அரசு மருத்துமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைசெய்த விக்ணேஷ்குமாரை (30)சாத்தூர் போலிசார் கைது செய்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.