இராமநாதபுரம் அருகே கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவியை கொன்ற கணவர்..

இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தையடுத்துள்ள பனைக்குளம் அருகே கிருஷ்ணாபுரம் மீனவர் காலனியைச் சேர்ந்தவர் முனீஸ்வரன்(32). இவருக்கும், குத்துக்கல்வலசையைச் சேர்ந்த தனலட்சுமிக்கும் (32) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் வெளிநாடு வேலைக்குச் சென்ற முனீஸ்வரன் தனலட்சுமியின் குடும்பச் செலவிற்கு பணம் அனுப்பவில்லை. சில மாதங்களுக்கு முன் முனீஸ்வரன் ஊர் திரும்பினார். இங்கு முனீஸ்வரன் தனது உறவுக்கார பெண்ணிடம் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இதனால் முனீஸ்வரனை தனலட்சுமி கண்டித்து வந்தார். இதுதொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் தனலட்சுமி அணிந்திருந்த நகைகளை கேட்டு முனீஸ்வரன் கடந்த 18ஆம் தேதி இரவு தகராறு செய்தார். நகைகளை தர மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதனால் ஆத்திரமடைந்த முனீஸ்வரன், தனலட்சுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். தனலட்சுமி கொலை செய்ததாகக் கூறி தேவிபட்டினம் போலீசில் சரணடைந்த  முனீஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!