தாம்பரம் அருகே வாலிபர்கள் இருவர் வெட்டி கொலை.. மர்ம நபர்கள் வெறிச் செயலால் பரபரப்பு…

சென்னை மேற்கு தாம்பரம் அற்புதம் நகரில் வசித்து வருபவர் பிரதீப்.  இவர் துணியை அயனிங் தொழில் செய்து வருகிறார். இவருடைய நண்பர் சேலையூர் ஆதிநகர் சுரேஷ் ஏறகனவே குண்டாஸ் வழக்கில் கைது செய்யப்பட்டு மூன்று மாததிற்க்கு முன்னர் ஜாமீனில் வெளி வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் வேறு நண்பர்களிடையே மூன்று நாட்களாக வாக்குவாதத்தில் ஈடுபட்டததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று (15/07/2019) மதியம் இருவரும் மேற்கு தாம்பரத்தில் உள்ள பிரதீப் வீட்டின் அருகே நின்று கொண்டு இருக்கும் போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பிரதீப் மற்றும் சுரேஷ் கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றனர். பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

இதை கண்ட பொதுமக்கள் தாம்பரம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு விரைந்து வந்த போலீசார் இருவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசுப் பொது மருத்துவமனையில் அனுப்பிவைத்தனர் பட்டப்பகலில் நடைபெற்ற இச்சம்பவத்தால் மேற்கு தாம்பரத்தில் பெரும் பரபரபையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சம்பவ இடத்திற்க்குமக்கள் தென் சென்னை இனை ஆணையர் மகேஷ்வரி விசாரணை செய்து தனி படை அமைத்து தீவிரமாக மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!