இராமநாதபுரம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் நானா என்ற நாகநாதன், 32. திருமணமாகி 10 ஆண்டுகளான இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பெயின்டராக வேலை பார்த்து வரும் இவர் கஞ்சா வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. கஞ்சா விற்பனையில் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக மற்றொரு தரப்பினருக்கும், நாகநாதனுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.
இராமநாதபுரம் குட்ஷெட் தெருவில் இன்று பகல் 11:30 மணியளவில் இவர் நின்று கொண்டிருந்த பொழுது அங்கு வந்த 3 பேருக்கும், நாகநாதனுக்கும் இடையேயான முன் விரோதம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஆவேசமடைந்த 3 பேர் நாகநாதனின் கழுத்து, மார்பு பகுதிகளில் கத்தியால் சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் நாகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நாகநாதன் உடலை, இராமநாதபுரம் டவுன் போலீசார் கைப்பற்றி அரசு மருத்துவமனை அனுப்பினர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


You must be logged in to post a comment.