ஆற்காடு அருகே கணவன் மற்றும் குழந்தையை கொன்ற பெண்…. போலீசார் கைது செய்தனர் ….

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே கணவன் மற்றும் குழந்தையை கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இச்சம்பவத்தில் கணவன் மனைவி இரண்டு பேருமே வேறு தொடர்பில் இருந்ததாகவும் தகவல் உள்ளது, ஆகையால் மனைவி கொன்றதாகவும், இன்னொரு கோணத்தில் கணவனின் கள்ள காதலில் ஆத்திரம் கொண்டு  இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.  ஆனால் இந்த கள்ள உறவுகளினால் நாளுக்கு நாள் உயிர் பலி அதிகமாகி வருவதுதான் யதார்த்தம்.

இந்த கொடூர சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில்  கூறப்படுவதாவது, வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்ததாஜ்பூரா பகுதியை சேர்ந்த ராஜா (24) அதே பகுதியை சேர்ந்த மாற்று ஜாதியை சேர்ந்த தீபிகா (20) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து உள்ளார். இவர்களுக்கு பிரனீஷ் (1) என்ற குழந்தை உள்ளது. ராஜா எலக்டீசியன் வேலை செய்து வருகின்றார். இவருக்கு குடிபழக்கமும் உண்டு. ராஜாவின் நண்பர் இதே ஊரே சேர்ந்த ஜெயராஜ் என்பவனிடம் தீபிகா கள்ளக் காதல் இருந்தது. இதை ராஜா கண்டித்து உள்ளார். இதனால் கணவனை கொலை செய்ய முடிவு செய்திருக்கிறாள்.

சம்பவத்தன்று இரவு கணவன் குடித்துவிட்டு தூங்கி கொண்டு இருக்கும் போது தலையில் கல்லை போட்டு கொலை செய்து உள்ளாள். அருகில் தூங்கி கொண்பிருந்த பிரனீஷையும் கழுத்தை நெறித்து கொன்று அருகில் உள்ள ஏரியில் தனது கள்ளக் காதலன் ஜெயராஜ் துணையுடன் புதைத்து உள்ளார். பிறகு இருவரையும் காணவில்லை என்று நாடகம் ஆடி உள்ளாள். ராஜாவின் அக்கா லட்சுமி ஆற்காடு தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் தீவிர விசாரணை செய்து தீபிகாவை கைது செய்து ஆற்காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் கள்ளக் காதலன் ஜெயராஜை போலீசார் தீவிர விசாரணை வளையத்தில் கொண்டு வந்து உள்ளனர். 2 பேரின் சடலத்தை ஆற்காடு தாசில்தார் வச்சலா ராணிப்பேட்டை டிஎஸ்பி கலைச்செல்வன் மற்றும் மருத்துவ குழுவினரின் பரிசோதனைக்கு பின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கே.எம்.வாரியார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!