மதுரை சிந்தாமணி பகுதியில் ஓட்டு போட வந்த முன்னாள் மண்டல தலைவர் VK குருசாமியின் மருமகன் எம் எஸ் பாண்டி, திமுக பகுதி செயலாளர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் சிந்தாமணியில் ஓட்டு போடுவதற்காக வந்துள்ளார். அப்போது ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் நடுரோட்டில்
பயங்கர ஆயுதங்களால் வெட்டியுள்ளனர். அப்பொழுது உயிருக்கு பயந்து வீட்டு ஓடிய அவரை துரத்தி சென்று வீட்டுக்குள் வைத்து சரமாரியாக வெட்டி விட்டு மர்ம கும்பல் தப்பியது.
உயிருக்கு போராடிய உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். உடனே அவரை ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். தடயவியல் நிபுணர்களும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் ஏதும் உள்ளதா? என ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த கொலையானது முன்விரோதத்தால் நடந்த கொலையா? அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












