திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை பகுதியில் வசித்து வருபவர்கள் தங்கமனி- முனீஸ்வரி தம்பதியினர் இவர்களுக்கு திருமணம் ஆகி ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். இருவரும் சேடபட்டி அருகில் உள்ள தனியார் நூர்பாலையில் வேலை செய்துவருகின்றர். இரவு வேலைமுடிந்து சுமார் இரவு 11.30 மணியளவில் வீட்டிற்கு வந்தநிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கணவர் தங்கமனி (வயது 30) மனைவியை சுத்தியலால் தலையில் பலமாக அடித்ததில் முனீஸ்வரி மயக்கமடைந்துள்ளார். இதை பயன்படுத்தி மகள் ஹரினி (வயது 3) பெண்குழந்தையை தான்
வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார். குழந்தை ஹரினி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தது. இதனை அறிந்து அருகாமையில் வசித்துவரும் முனீஸ்வரியின் உறவினர்கள் தங்கமனியை பிடிக்க முற்பட்டபோது அவர்களிடம் இருந்து தப்பித்து ஒளிந்துகொண்டார். இரவு நேரம் என்பதால் அவரை பிடிக்க முடியாமல் உறவினர்கள் சென்றபிறகு மீண்டும் அதேஇடத்திற்க்கு திருப்பி வந்த தங்கமனி (வயது 30) ஆஸ்பிட்டாஸ் சீட் போடப்பட்டுள்ள இரும்பு பைப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செம்பட்டி காவல்துறையினர் குழந்தை ஹரினி – தங்கமனி இருவர் உடலையும் உடற்கூறு ஆய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிதோடு பலத்த காயத்துடன் இருந்த முனிஸ்வரி என்பவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி சுத்தியலை கைப்பற்றி கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









