வேடசந்தூர் -கெண்டையகவுண்டனூர் அருகே ஒருவர் கொலை..

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கென்டையகவுண்டனூர் அருகே சவடமுத்து(எ) மொராஜ் (வயது 45) இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி பூங்கொடி என்பவருக்கு சசிகலா, சர்மிளா என்ற இரு பெண்களும் இரண்டாவது மனைவி லட்சுமிக்கு வடிவேல் என்ற பையனும் உள்ளனர்.

இவர் நான்கு சக்கர வாகனங்களை வைத்து வாடகை தொழில் செய்து வருகிறார். மேலும் காமதேனு ரைஸ்மில் உள்ள இடத்தில் இவரது வாகனத்தை இரவு நேரங்களில் நிறுத்திவிட்டு உறங்குவது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை அவருடைய நண்பர் ராமசாமி என்பவர் சென்று பார்த்தபோது மர்மமான முறையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயின் மட்டும் காணவில்லை என்ற தகவல் பின்னர் தகவறிந்து வேடசந்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவர் உடலை உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து குற்றவாளியை தேடி வருகின்றனர். இறந்த சவடமுத்துவின் பிள்ளைகள் அவரது உடலை பார்த்து அழுதது அப்பகுதியில் சோகத்தை ஆழ்த்தியது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!