தேர்தல் முன் விரோதக் கொலை சகோதரர்கள் மீது குண்டர் சட்டம்…

உள்ளாட்சி தேர்தல் முன் விரோதம் தொடர்பான கொலை வழக்கில் சகோதரர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரையூர் அருகே சின்ன ஆனையூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு மருதங்கநல்லு£ர் காவடி முருகன், ராமலிங்கம் ஆகியோர் போட்டியிட்டனர். காவடி முருகனுக்கு ஆதரவான ஓட்டுகளை சின்னஆனையூர் முருகேசன் மூலம் ராமலிங்கம் சேகரிக்க முயன்றார்.

இது தொடர்பான மோதலில் ஆறுமுகம் கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக ராமநாதபுரம் நீதிமன்றம் வந்து திரும்பியபோது முருகேசனுக்கும், ஆறுமுகம் என்ற காளிதாஸ் தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் காளிதாஸ் சில நாட்களுக்கு முன் கொல்லப்பட்டார். இக்கொலையில் தொடர்புடைய சின்ன ஆனையூர் அழகர்சாமி மகன் அலெக்ஸ் என்ற அலெக்ஸ் பாண்டியன் 23, இவரது தம்பி அழகுராஜா 22 ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் ஒம் பிரகாஷ் மீனா மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் நடராஜன் உத்தரவின்பேரில் அலெக்ஸ்பாண்டியன், அழகுராஜாவை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!