அரியலூர் மாவட்டம் தொட்டறை பகுதியைச் சேர்ந்தவர் லதா, 38. இராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகே மரியாபுரத்தைச் சேர்ந்தவர் மோசஸ், 37. இருவருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருடன் லதாவுக்கு கள்ள தொடர்பு ஏற்பட்டது. 2018, மே மாதம் மோசஸை விட்டு லதா பிரிந்தார். இதன் பிறகு கள்ளக் காதலனுடன் தலைமறைவானார்.
லதாவை காணவில்லை என, 2018, மே 6 ல், அபிராமம் போலீசில் மோசஸ் புகார் கொடுத்தார். இந்நிலையில் அபிராமத்தில் லதா இருந்த போது, பாஸ்போர்ட்க்கு விண்ணப்பித்திருந்தார். இதற்கான விசாரணைக்காக, அபிராமம் போலீசார் தன்னை அழைப்பதாக, மோசசுக்கு லதா தகவல் தெரிவித்தார். கள்ளக் காதலனுடன் மாயமான லதாவை கொலை செய்யும் திட்டத்துடன் மோசஸ் , அபிராமம் அருகே அகத்தாரிருப்பு விலக்கு ரோட்டில், லதாவுக்கு காத்திருந்தார். அங்கு வந்த லதாவை, தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால், லதாவை மோசஸ் அடித்து கொலை செய்தார். லதாவின் உறவினர் பிரகாஷ் புகாரின்பேரில், மோசனஸ அபிராமம் இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி கைது செய்தார்.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









