இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு ஜாமியா நகர் பகுதியைச் சார்ந்தவர் ஐகுபர் சாதிக் இவரது மகன் லுக்மான் ஹக் (32). இவர் இறைச்சி கடைகளுக்கு ஆடு வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் இவருக்குச் சொந்தமான 10 ஆடுகளில் ஒரு ஆட்டை வடக்கு தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கச்சு மரைக்காயர் என்ற இம்ரான் கான் ஆட்டோவில் கடத்திச் செல்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து இம்ரான் கானை தேடிச் சென்ற போது, ஜாமியா பள்ளிவாசல் பகுதியில் லுக்மான் ஹக்கீம் மடக்கி பிடித்தார். ஆடு கடத்தல் தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இம்ரான் கான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் லுக்மான் ஹக்கீமை குத்தினார்.
இதில் உடலின் பல இடங்களில் காயமடைந்த லுக்மான் ஹக்கீம் சம்பவ இடத்திலேயே பலியானார். தஞ்சையை பிறப்பிடமாக கொண்ட இம்ரான் கான் , கீழக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை தொடர்பாக 10க்கும் மேற்பட்ட முறை சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. லுக்மான் ஹக்கீம் உடலை கைப்பற்றிய போலீசார் தப்பி ஓடிய இம்ரான் கானை (25) தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கீழக்கரை போலீசில் இம்ரான் கான் சரணடைந்தார்.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











