தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே தாந்தாங்காடு வெட்டிக்காடு ரவுடி தம்பா கார்த்திக் (26) . இவர் கடந்த 2018 ஆக. 13 இல் மக்களால் அடித்து கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக பட்டுக்கோட்டை நகர் போலீசார் வழக்கு பதிந்து நரியம்பாளையம் மாரிமுத்து மகன் பிரகாஷ் (26) உள்பட 7 பேரை கைது செய்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வந்த பிரகாஷ் உள்பட 7 பேரும் பட்டுக்கோட்டை போலீசில் தினமும் காலை கையெழுத்திட்டு வந்தனர்.
நேற்று (அக்.24) காலை பிரகாஷ் உள்பட 7 பேரும் போலீசில் கையெழுத்து போட்டுவிட்டு சரக்கு வாகனத்தில் திரும்பி வந்தனர். தஞ்சை மெயின்ரோடு ஆலடிக்குமுளை பகுதியில் வந்தபோது 10 க்கும் மேற்பட்ட கும்பல் அவர்களை டூ வீலரில் பின் தொடர்ந்து அவர்கள் வந்த வாகனம் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.
இதில் வேனில் இருந்து விழுந்த பிரகாஷை அக்கும்பல் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டிக் கொன்றனர். பிரகாஷின் தலையை அரிவாளால் வெட்டி துண்டித்து ஒரு கி .மீ., தூரத்தில் பாளையம் என்ற இடத்தில் டீ கடை எதிரே மக்கள் நடமாட்டம் நிறைந்த தஞ்சை மெயின் ரோட்டில் பிரகாஷின் தலையை வைத்துவிட்டு கும்பல் தலைமறைவாகினர்.
இக்கொலை வழக்கு தொடர்பாக பட்டுக்கோட்டை போலீசில் வழக்கு பதிந்து தலைமறைவு கும்பலை தீவிரமாக தேடினர். இந்நிலையில் இக் கொலை வழக்கு தொடர்பாக, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வெட்டிக் காடு பூக்கொல்லை தெரு தங்கையன் மகன் அருண் மன்னார் 28, ரத்னகுமார் மகன் இட்லி பிரசாந்த் 23, பெருமாள் கோயில் தெரு, செம்பு மணி என்ற மணிகண்டன் 24, செல்லத்துரை மகன் அடக்கம் என்ற கலையரசன் 22, சுண்ணாம்புக்கார தெரு மகேந்திரன் மகன் மதன் 23, மேலத்தெரு பன்னீர் செல்வம் மகன் போண்டா மணிகண்டன் 22, மதன்குமார் மகன் பிரகாஷ் 22, ஏனாதி ரத்தினம் மகன் ஆசை பாண்டி என்ற ஆசைத்தம்பி 22, வெட்டிக்காடு வடிவேல் பாரதி 22 ஆகியோர் பரமக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி பிரசாத் முன்னிலையில் இன்று சரண் அடைந்தனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.