திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா கொடைரோடு அருகே கள்ளக்காதலனுடன் கணவரின் கழுத்தை அறுத்து கொலைசெய்ய முயற்சித்ததாக ஐஸ்வர்யா என்ற பெண்னை கள்ளக்காதலனுடன் போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, கொடைரோடு அருகேயுள்ள ராஜதானி கோட்டையை சேர்ந்தவர் வடிவரசு வயது 36, கொத்தனார் வேலைசெய்து வருகிறார், இவருடைய மனைவி ஐஸ்வர்யா .31. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்த வாழ்ந்து வந்தனர்.
இதனால் வடிவரசு தனது குழந்தைகளுடன் தாயார் வீட்டில் வசித்து வந்தார். ஐஸ்வர்யா அவருடைய பெற்றோர் வீட்டில் வசித்து கொண்டு திண்டுக்கல் அருகே உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சடையாண்டிபுரம் செல்லும் சாலையில் உள்ள ஒனடயில் ரத்த காயங்களுடன் வடிவரவு உயிருக்கு போராடி கொண்டிருப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அம்மைய நாயக்கனூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தாபோது வடிவரசு கழுத்து அறுபட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது தெரிய வந்தது . இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் .மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து அம்மைய நாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப் இன்ஸ்பெக்டர்கள் ரபீக், நாராயணன் மற்றும் போலீசார் விசாரித்ததில் அவருடை மனைவி ஐஸ்வர்யா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக் கட்ட முயன்றது தெரிய வந்தது .
சின்னாளபட்டியை அடுத்த கோட்டைப்பட்டியை சேர்ந்தவர் சரத்குமார் 25 இவர் ஐஸ்வர்யா வேலை பார்க்கும் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார் அப்போது சரத்குமாருக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வடிவரசுவின் தாயாருக்கு உடல் நலம் பாதிக்கப் பட்டுள்ளது . இதை அறிந்த ஐஸ்வர்யா. அவரை பார்க்க வந்துள்ளார். அப்போது வடிவரசு தனது மனைவியை கன்டித்தாக தெரிகிறது. கள்ளக்காதலுக்கு கணவர் இடையூறாக இருப்பதால் அவரை தீர்த்து கட்ட கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஐஸ்வர்யா முடிவு செய்ததாக தெரிகிறது.
அதன்படி சரத்குமார், வடிவரசுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தனக்கு சாதி கவுண்டன்பட்டியில் 2 சென்ட் இடம் உள்ளது என்றும், அங்கு நீங்கள் தான் வீடு கட்டி தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தங்களை சந்தித்து பேச வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து அவர்கள் கொடைரோடு அருகேயுள்ள சடையாண்டிபுரம் செல்லும் சாலையில் சந்தித்துள்ளனர். அப்போது அங்கு வைத்து இருவரும் மது அருந்தியுள்ளனர் . போதை தலைக்கேறியதும் சரத்குமார் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் வடிவரசுவின் கழுத்தை அறுத்துள்ளார். இதை சற்றும் எதிர் பார்க்காத வடிவரசு நிலை குலைந்து போயுள்ளார். பின்னர் அவரை ஒடையில் தள்ளிவிட்டு சரத்குமார் தப்பி ஒடியது தெரிய வந்தது. இதையடுத்து சரத்குமாரையும், ஐஸ்வர்யாவையும் போலீசார் கைது செய்தனர். கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே தீர்த்துக் கட்ட முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











