அருப்புக்கோட்டை :
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள ஆத்திப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணபதி (55). இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு திருமணம் முடிந்து தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார். கணபதியுடன் அவரது மகன்கள் ராஜா (21) மற்றும் சசிக்குமார் (18) இருந்து வருகின்றனர். இதில் கடைசி மகன் சசிக்குமார் கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. தினமும் குடி போதையில் வீட்டில் இருப்பவர்களுடன் சசிக்குமார் தகராறு செய்து வந்தார். நேற்று இரவு நீண்ட நேரம் கழித்து வீட்டிற்கு வந்த சசிக்குமார் போதையில் கத்திக் கொண்டே இருந்துள்ளார். இதனால் வீட்டில் இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறி, வீட்டின் பின் பகுதிக்குச் சென்று படுத்துக் கொண்டனர். இன்று காலை கணபதி, வீட்டிற்குள் சென்று பார்த்த போது சசிக்குமார், உடலில் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடப்பதைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவலறிந்த அருப்புக்கோட்டை காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று, சசிக்குமார் உடலை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடி போதையில் வீட்டில் இருந்த வாலிபர், கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









