கீழக்கரையில் அதிரடி சுகாதார நடவடிக்கை…

கீழக்கரையில் அதிரடியாக சுகாதார நடவடிக்கைகளும் சோதனைகளும் நகராட்சி மற்றும் மண்டல உயர்நிலை அதிகாரிகளால் இன்று (19-04-2017) மேற்கொள்ளப்பட்டது.

கீழக்கரையில் அதிகமாக பரவி வரும் வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சலினால் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் இராமநாதபுரம் மற்றும் மதுரை ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் மதுரை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் ஜானகி ரவி உத்தரவின் பேரின் இந்த நடவடடிக்கைகள் தொடர்ந்து ஒரு வார காலம் 23ம் தேதி வரை நடைபெறும் என்று நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.  மேலும் இந்த சிறப்பு பணிக்காக பரமக்குடி மற்றும் பெரியகுளம் நகராட்சியை சார்ந்த சுகாதார ஆய்வாளர்கள் முகாமிட்டு கீழ்க்கரையில் பல பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

இப்பணிக்கு கீழக்கரை பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு அளிக்குமாறு நகராட்சி சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தப் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி கீழக்கரை தெற்கு தெரு ஜமாஅத் சார்பாக கீழக்கரை நகராட்சி ஆணையாளருக்கு மனு அளிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.  இதுபோல் அனைத்து தெரு ஜமாத் நிர்வாகமும் ஒன்று சேர்ந்து இப்பிரச்சினையை முன்னெடுத்து சென்றால் நகராட்சி நிர்வாகமும் வீரியமாக செயல்பட்டு சுகாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!