ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் பணிபுரியும் பதிவு பெற்ற பொறியாளர் பாரதி கண்ணன் தனது வாடிக்கையாளருக்கு சொந்தமாக பரமக்குடியில் உள்ள நான்கு வீட்டுமனைகளுக்கு நகராட்சியில் பிளான் அப்ரூவல் பெற கட்டணமாக ரூபாய் 76,850 ரூபாயை கடந்த வாரம் செலுத்தியுள்ளார்.
இந்த நிலையில், இது தொடர்பாக நகராட்சியில் டவுன் பிளானிங் அலுவலராக பணிபுரியும் பர்குணன் என்பவரை சந்தித்து பாரதி கண்ணன் விவரம் கேட்ட பொழுது, ஒரு வீட்டு மனைக்கு ரூபாய் 5000 வீதம் நான்கு வீட்டுமனைக்கு மொத்தம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக வேண்டுமென கூறியுள்ளார். அதற்கு பொறியாளர் நகராட்சிக்கு கட்ட வேண்டிய அரசு பணத்தை முழுவதும் செலுத்தி உள்ளேன் ஆகையால் 20000 ரூபாய் லஞ்சம் கொடுக்க முடியாது என கூறியுள்ளார்.
இந்த நிலையில், பாரதி கண்ணன் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து இன்று GPAY மூலம் பர்குணன் அலைபேசி எண்ணிற்கு 20,000 ரூபாய் லஞ்சப் பணம் அனுப்பிய பொழுது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார்கள் பர்குணனை செல்போனுடன் கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

You must be logged in to post a comment.