கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட கடைகள் வணிக நிறுவனங்கள் தொழில் சார்ந்த மையங்கள் தமிழில் பெயர் பலகை வைக்க நகராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்
மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன
நகர்ப்புற உள்ளாட்சி விதிப்படி புதிதாக தொழில் தொடங்குபவர்கள் புதியதாக விண்ணப்பித்து தொழில் உரிமம் பெற வேண்டும்
ஏற்கனவே தொழில் உரிமம் பெற்று தொழில் செய்பவர்கள் தொழில் உரிமங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் தொழில் உரிமம் இல்லாமல் வியாபாரம் மேற்கொண்டால் மறு அறிவிப்பின்றி கடைகள் வியாபார நிறுவனங்கள் மூடி சீல் வைக்கப்படும்
மேலும் நகர்ப்புற உள்ளாட்சி 2023 விதிமுறைகள் படி தமிழில் பெயர் பலகை வைப்பது கட்டாயம் என தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது எனவே கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கடை மற்றும் வணிக நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகராட்சி ஆணையாளர் அமுதா தெரிவித்துள்ளார் ….
You must be logged in to post a comment.