முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முல்லைத்தீவில் முழு கடையடைப்பு..

இலங்கையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவு நாளையொட்டி   முல்லைத்தீவில் முழு கடையடைப்பு நடத்தப்பட்டது.

கடந்த 2009 ம் ஆண்டு மே மாதம் 18 தேதி யுத்தம் முடிவுக்கு வந்த நாளில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான உறவுகளுக்கான  முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது.

அதையொட்டி இன்றைய தினம் நண்பகல் 12 மணிவரை வர்த்தகர்கள் கடைகளை அடைத்து துக்கதினமாக அனுசரிக்க வேண்டுகோள் விடுத்ததையடுத்து இன்று முல்லைத்தீவு மாவட்டமெங்கும் வர்த்தக நிலையங்களை பூட்டி இன்றைய நாளை துக்கதினமாக அனுஸ்ரித்து வருகின்றனர்.

இதனால்  முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு முள்ளியவளை, தண்ணீரூற்று, ஒட்டுசுட்டான், மாங்குளம், மல்லாவி உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் வர்த்தகர்கள் கடைகளை பூட்டி தமது பூரண ஆதரவை வழங்கினர்.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!