ராமநாதபுரம் மாவட்டம் தெற்கு காட்டூரில் முத்துமாரியம்மன் முளைக்கொட்டு உற்சவம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தெற்கு காட்டூர் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் முளைக்கொட்டு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 5-ம் தேதி முத்து பரப்புடன் தொடங்கிய விழா ஏழு நாட்கள் பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 11 வகை அபிஷேகங்களுடன் நடைபெற்றது. இரவு கும்மியாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் மக்களை மகிழ்வித்தன.
செவ்வாய்க்கிழமை வழுதூரில் இருந்து கரக ஊர்வலம் கொண்டு வரப்பட்டு, பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மலர் மாலை அணிவித்து வழிபட்டனர். வீடுகளில் வளர்த்த முளைப்பாறைகள் மேளதாளத்துடன் ஆலயத்திற்கு கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. புதன்கிழமை நூற்றுக்கணக்கான பெண்கள், ஆண்கள் தலையில் முளைப்பாரி சுமந்து ஊர்வலமாக வந்து வழுதூர் பெரிய ஊரணியில் கரைத்தனர்.
விழா ஏற்பாடுகளை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஆர். ராமமூர்த்தி, ஊர் தலைவர் சிவசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
You must be logged in to post a comment.