கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் கோடைகால சிறப்பு வகுப்பு..

கோடைகால விடுமுறை ஆரம்பம் ஆனதும் ஓவ்வொரு மாணவர்களும் பல வழிகளில் பொழுதுபோக்க தொடங்கி விடுவார்கள். ஆனால் அவர்களை சரியான முறையில் வழிகாட்டி விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் கடமை பெற்றோர்களுக்கும், பள்ளிக்கூடங்களுக்கும் உண்டு.

அவ்வகையில் இந்த வருடம் கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி, சென்னை திறந்த வெளி பல்கலைக்கழகத்துடன் இணைந்து பேச்சு வழக்கு ஆங்கிலம் மற்றும் அரபி பயிற்சி முகாம் ஏற்பாடு செய்துள்ளார்கள். இப்பயிற்சி முகாம் ஏப்ரல் மாதம் 25ம் தேதி ஆரம்பித்து மே மாதமே 25ம் தேதி வரை ஓரு மாத காலம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இவ்வகுப்பில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கலந்து கொள்ளலாம். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனி இட வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்பயிற்சியின் நிறைவில் சென்னை திறந்தநிலை பல்கலைக்கழகம் சார்பாக சான்றிதழும் வழங்கப்படும் என்பது இப்பயிற்சி முகாமின் சிறப்பம்சமாகும்.

இவ்வகுப்புகள் மேல் விபரங்கள் மற்றும் முன்பதிவுக்கு 04568-241865 என்ற பள்ளி அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!