இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் சமீபகாலமாக வாகனங்களின் அதிகரிப்பால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவருகிறது. முதுகுளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தில் வசிப்பவர்கள் பரமக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர், கடலாடி, கமுதி , சாயல்குடி போன்ற வெளியூர் மக்கள், தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் வேலைக்கு செல்ல முதுகுளத்தூர் வந்து செல்ல வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.
இதனால் தங்களது இருக்கர வாகனங்களை பாதுகாப்பாக விட்டு செல்ல இருக்கர வாகனக் காப்பகம் இல்லாமல் மிகவும் சிரமத்தில் உள்ளனர். முதுகுளத்தூரில் இரு சக்கர வாகனக்காப்பகம் இன்றி மெயின் பஜாரில் உள்ள கடைகளுக்கு முன்னால் வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். இதனால் பள்ளி மற்றும் அரசு அலுவலக நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வியாழக்கிழமை வாரச்சந்தையன்று பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்தை சீர் செய்ய காவல்துறையினர் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதனை சீர் செய்ய பஸ் நிலையம் அருகில் பேரூராட்சிக்கு சொந்தமான 36 (5) சர்வே எண் கொண்ட இரண்டரை சென்ட் (1090 சதுரடி ) இடம் பயன்பாடில்லாமல் உள்ளது, இந்த இடத்தில் இரு சக்கர வாகனக்காப்பகம் அமைத்தால் போக்குவரத்து நெரிசலை தடுப்பதுடன், பேருராட்சி நிர்வாகத்திற்கும் வருமானம் கிடைக்கும் என்பது பொது மக்களின் கருத்தாக உள்ளது.
ஆகையால் காவல் துறையினர் மற்றும் வருவாய் அலுவலர்களின் உதவியுடன் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தை சரி செய்து இரு சக்கர வாகனக்காப்பகம் அமைக்க பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு
வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










