மதுரையில் தொடரும் தீ விபத்து… கவனக்குறைவா?… பாதுகாப்பு குறைபாடா??..

மதுரை தெற்கு வெளி வீதியில் இன்று (14/11/2020) அதிகாலை காலை துணி மொத்த விற்பனைக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் 2 தீயணைப்பு வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள் மற்ற இரண்டு தீயணைப்பு வீரர்கள் காயமடைந்த நிலையில் தனியார் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  இந்த நிலையில் மீண்டும் இன்று (14/11/2020) இரவு 8 மணி அளவில் தீ விபத்து நடந்த பகுதி  மஞ்சநகார தெரு மஹால் இரண்டாவது தெருவில் அமைந்துள்ள ஏகே அகமது என்னும் ஜவுளி நிறுவனத்துக்கு சொந்தமான ரெடிமேட் துணி வைத்துள்ள குடோனில்  புகை வந்ததை தொடர்ந்து தீயணைப்பு நிலையத்திற்கு வந்த தகவலின் அடிப்படையில்  சம்பவ இடத்திற்கு விரைந்து மதுரை டவுன் நிலைய அலுவலர் வெங்கடேசன். தீயணைப்பு வீரர்கள் தீயினை விரைவாக அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்களின் துரித செயல்பாட்டால் மேலும் தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!