காவல் ஆய்வாளரை கண்டதும் துள்ளி குதித்து ஓடி வரும் பாசமிகு கோவில் காளை.

மதுரை மாவட்டம் மேலூர் காவல் நிலைய ஆய்வாளர் சார்லஸ் பேருந்து நிலைய பகுதி வழியே செல்லும் போதெல்லாம், அவரை எதிர்பார்த்து காத்து இருப்பது போல சாலைகளில் திரியும் கோவில் காளை ஒன்று, ஆனந்தத்தில் துள்ளி குதித்தவாறு வாகனத்தை நோக்கி ஓடி வருகிறது. உடனடியாக வாகனத்தை நிறுத்தும் ஆய்வாளர் சார்லஸ் வாழைப்பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்றவற்றை காளைக்கு வழங்கி வருகிறார்.மேலும் அவர் கொடுக்கும் உணவை நிதானமாக காளை உண்டபின் நன்றி தெரிவிப்பது போல, அவரது கையை நாக்கால் வருடிக் கொடுத்து விட்டு பின் அந்த இடத்தை விட்டுச் செல்கிறது.காவல் ஆய்வாளருக்கும், காளைக்கும் இடையே தினசரி நடக்கும் அந்த ஐந்து நிமிட பாசப்போராட்டம் காண்போரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம் என்று

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!