மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சிம்மக்கல் முதியோர் இல்லத்தில் தீபாவளி புத்தாடை மற்றும் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில் முதியவர்கள் பாடல்களைப் பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.மேலும் இதில் கலந்துகொண்ட சமூக ஆர்வலர்கள் கரங்களால் முதியவர்களுக்கு புத்தாடை வழங்க அழைக்கப்பட்டனர்.அனைவருக்கும் தீபாவளி விருந்தாக உணவு வழங்கப்பட்டது.இதில் சமூக ஆர்வலர்கள் துரைவிஜயபாண்டியன், செந்தில்குமார், அசோக்குமார், கண்ணன், கார்த்திகேயன், இளம் சமூக ஆர்வலர் நித்தீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முதியோர் இல்ல பொறுப்பாளர் கிரேசியஸ் அழ சிறந்த சேவையை பாராட்டி வழிகாட்டி விருது வழங்கப்பட்டது.அனைவருக்கும் வழிகாட்டி மணிகண்டன் நன்றி தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.