நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு இராஜபாளையம் சொக்கர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் திரு விளக்கு பூஜை

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருள்மிகு சொக்கர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு 17ம் தேதி சனிக்கிழமை முதல் 26 திங்கள்கிழமை வரை நவராத்திரி விழா சிறப்பாக நாள் தோறும் கொண்டாடப்பட்டு வருகிறதுஇதில் ஒரு பகுதியாக எட்டாம் நாளான இன்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது இந்த பூஜையில் இராஜபாளையம் பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜையில் பங்கேற்றனர்ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அம்மனுக்கு அலங்காரம் செய்து கொழு பூஜை நடைபெற்றது முதல் நாள் ராஜராஜேஸ்வரி அம்மறுக்கும், இரண்டாம் நாள் ஸ்ரீ மீனாட்சி மூன்றாம் நாள் ஸ்ரீ அன்னபூர்ணா நான்காம் நாள் ஸ்ரீ தான்யலட்சுமி ஐந்தாம் நாள் அனந்தசயனம் ஆறாம் நாள் ஸ்ரீ தட்சணாமூர்த்தி ரூபிணி ஏழாம் நாள் துர்கா லக்ஷ்மி சரஸ்வதி பூஜை எட்டாம் நாளான இன்று மகிஷாசுர மர்தினி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் கொழு பூஜையும் நடைபெற்றதுவிழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பி.ஆர் வெங்கட்ராம ராஜா தலைமையில் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!