தேவர் தங்க கவசம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டது:தமிழக துணை முதல்வர் ஒபிஎஸ் வங்கி லாக்கரிலிருந்து எடுத்து கொடுத்தார்:

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இம் மாத இறுதியில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை நடைபெறுகிறது. இதற்காக, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தேவருக்கு சிலைக்கு அணிவிக்க தங்க கவசம் நன்கொடையாக வழங்கப்பட்டது. அந்த கவசத்தை தேவர் ஜயந்தியன்று அணிவிக்கப்பட்டு, மீண்டும் மதுரை அண்ணாநகரில் உள்ள பாங்க் ஆப் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு, தமிழக துணை முதல்வர் ஒபிஎஸ் முன்னிலையில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்படும்.இது ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.இதேபோல், தங்க கவசத்தை துணை முதல்வர் ஒபிஎஸ், வெள்ளிக்கிழமை காலை எடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பசும்பொன் நிர்வாகிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டது.இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, உதயக்குமார்எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, சரவணன், முன்னாள் துணை மேயர்கள் நவநீதகிருஷ்ணன், திரவியம், முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, துணை முதல்வர் ஒபிஎஸ்ஸை வரவேற்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!