கொரோனா ஊரடங்கு காலங்களில் கொரானாவால் உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்த!தன்னார்வலர்கள் களப் பணியாளர்கள்சமூக சேவகர்களை பாராட்டி விருது வழங்கும் நிகழ்ச்சி….

எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் மதுரையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது…இதில்மதுரை மாவட்ட பொதுச்செயலாளர்.. சாகுல் ஹமீது வரவேற்புரை நிகழ்த்தினார்…வழக்கறிஞர் அணி மாநில தலைவர் ஜாஹங்கிர் பாஷாமுஸ்லீம் ஐக்கிய ஜமாஅத் மதுரை மாவட்ட தலைவர் லியாகத் அலிவிமன் இந்தியா மூவ் மெண்ட் மாநில தலைவி நஜ்மா பேகம் எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில மாவட்ட தொகுதி மற்றும் துணை அமைப்பின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்..உலகமே அச்சப்பட்ட நிலையில் சக மனிதர்களுக்குஉதவி செய்வதற்காக முன் வந்த நல்லுல்லங்களை கண்ணியப்படுத்தி சிறந்த சமூக சேவகர்களுக்கான விருதுகளை எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்கள்..பாப்புலர் ஃப்ரண்ட் மாநில துணை தலைவர் காலித் முஹம்மதுவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர்,கனியமுதன் ஆகியோர்வாழ்த்துரை வழங்கினார்…மாவட்ட துணை தலைவர் சீமான் சிக்கந்தர் நன்றியுரை நிகழ்த்தினார்…நிகழ்ச்சியில் கொரானா காலங்களில்! களப் பணிகளில் ஈடுபட்ட மருத்துவர்கள், அரசு ஊழியர், காவல் துறையினர், ஊடகவியலாளர்கள், சுகாதார பணியாளர்கள்,நல்லடக்க பணிகளில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ கட்சி தன்னார்வலர் தொண்டு செயல்வீரர்கள் ஆகியோர்களுக்கு சமூக சேவகர்கள்விருது வழங்கி கௌரவிக்கபட்டது. மதுரை மாநகர விளக்குத்தூண் உதவி ஆணையாளர் சூரக் குமார். மதுரை மாவட்ட மருத்துவ அதிகாரி,குமரகுரு… உள்ளிட்டோர் கலந்துகொண்டு விருதுகளை வழங்கி சிறப்பித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!