மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான பூத் கமிட்டி கூட்டம் இன்று திருப்பரங்குன்றம் தனியார் மஹாலில் நடைபெற்றது. இதில் அதிமுக வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கலந்து கொண்டு தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.தொண்டர்களிடையே எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேசும்போது.கச்சத்தீவை தாரை வார்த்துக் கொடுத்தது திமுக, முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் தீர்வு காணமுடியாத கட்சி திமுக, சர்க்காரியா கமிஷன் ஊழல் காரணமாக ஆட்சியை இழந்தது திமுக ஆனால் 16 வகையான சாதனங்களை மாணவர்களுக்கு வழங்கியது அதிமுக, குடி பராமரிப்பு பணிகளை கொண்டுவந்தது அதிமுக, தற்போது டெல்டா மாவட்டங்கள் பசுமையாக இருந்து வருகிறது ஆனால் திமுக ஆட்சி காலத்தில் இது போல் இருந்தது இல்லை, தற்போது மின்சார பிரச்சனை கிடையாது திமுக ஆட்சியில் மின்சாரப் பிரச்சனை தீர்வு காண முடியாமல் இருந்தனர். தேர்தலுக்கு ஆறு மாத காலத்திற்கு முன்பே பூத் கமிட்டி கூட்டம் நடத்துவது நமது தெருக்களில் இருக்கக்கூடிய பிரச்சினைகளை தீர்வு காண்பதற்காகதான் என ராஜன்செல்லப்பா பேசினார்.பின் செய்தியாளர்களைச் சந்தித்து எம்எல்ஏ ராஜன்செல்லப்பா கூறும்போதுஅதிமுகவின் தேர்தல் வியூகம் குறித்த கேள்விக்கு
களப்பணியில், அதிமுக மக்களோடு மக்களாக இணைந்து மக்களுக்கு உதவி செய்யும் இயக்கமாக இருப்பதாகவும், தொண்டர்கள் அதே அர்ப்பணிப்புடன் பணி செய்வதாலும் அதிமுகவே ஆட்சியில் அமரும்…!!நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் அரசாங்கமே முடிவெடுத்து கொள்வது குறித்த கேள்விக்குநகர்ப்புற, கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கான மிகச்சரியான சட்டமுன்வடிவை அரசாங்கம் கொண்டு வந்துள்ளதுஎனவும்,7.5 சதவீதத்திற்கான ஒப்புதல் என்றைக்கு கிடைக்கிறதோ, அன்றைக்கு தான் கலந்தாய்வு என்று முதலமைச்சர் துணிச்சலான முடிவை எடுத்துள்ளார்…!
!செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.