தென் மாவட்ட மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை.இங்கு தினமும் வெளிநோயாளிகளாகவும், உள்நோயாளி காளகவும் ஆயிரக்கணக்கில் வருகின்றனர்.முக்கியமாகஉள்நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டு பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சிகிச்சைபெறும் நோயாளிகளும், உடன் வரும் உறவினர்களும் அச்சமடைந்துள்ளனர்.வார்டு பகுதியில் அனைத்து நேரங்களிலும் நாய்கள் உலா வருவதுடன் சண்டையிட்டுக் கொள்வதால் தங்களை நாய் கடிக்கும் அச்சத்துடன் உரிய பாதுகாப்பு இல்லாத நிலையில் சிகிச்சை பெறும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக சிகிச்சை பெறும் நோயாளிகள் கவலை தெரிவிக்கின்றனர்.நாய்கள் தொல்லையால் சிகிச்சை பெறுபவர்களுக்கு நிலவும் பாதுகாப்பற்ற நிலையை போக்க அரசு மருத்துவமனை நிர்வாகம் நாய்கள் மருத்துவமனைகளுக்குள் வராமல் தடுப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் சிகிச்சை பெறும் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You must be logged in to post a comment.