மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாமில் பணியின்போது உயிர்நீத்த வீரர்களுக்கு சிஐஎஸ்எப் வீரர்களின் மரியாதை மற்றும் வீரவணக்கம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாமில் பணியில் உயிர் நீத்த வீரர்களுக்கு மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.எல்லை பாதுகாப்பு படை ,இராணுவம், காவல் துறைகளில் பணியின்போது உயிர்நீத்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் விமான நிலையம் சிஐஎஸ்எப் முகாமில் பணியின்போது உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் துணை கமாடண்ட் உமாமகேஸ்வரன் தலைமையில் உதவி கமாண்டன்ட் சனிஷ்க் மற்றும் வீரர்கள் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பணியின்போது உயிர் நீத்த ஈரண்ணநாயக.வேட்பால், மகேந்திர குமார் பஸ்வான், குட்டு குமார் ,அலேக் நிரஞ்சன் சிங் ,குல்தீப் ஆகிய வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!