சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அடுத்த கல்புலிசான்பட்டியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் அறுவடை செய்ய முடியாத நிலையில் நெல் பயிர்கள் இருந்ததுமேலும் அறுவடை செய்த நெல் பயிர்கள் வெயிலிலும் மழையிலும் நனைந்து முளைத்து சேதம் அடைந்து வந்தது இதை தொடாந்து நெல் கொள்முதல் நிலையம் திறக்க இப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க முடிவு செய்ததன் அடிப்படையில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கலாவதி மற்றும் பால்பாண்டி கூறுகையில் நாங்க கடன உடன வாங்கி விவசாயம் செய்து அதில் விளைந்த நெல்கலை விளக்கு போட முடியாமல் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க இப்பகுதி விவசாயிகள் பல முறை கோரிக்கை முறையிட்டும் அரசு செவிசாய்க்கவில்லை நாங்கள் கொடுத்த பேட்டியின் விளைவாக தற்போது நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது இதனால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள இதேபோல் பாண்டி குமார் விவசாய கூறும்பொழுது அரசு எங்களது கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து இருக்கிறது இது இடைத்தரகர் இல்லாமல் விவசாயிகளுக்கு மட்டும் பயன்படும்படி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று . கேட்டுக் கொண்டனர்.


You must be logged in to post a comment.