
பல லட்ச ரூபாய் மதிப்புள்ள திருடுபோன மொபைல் போன்களை கண்டறிந்து உரிய நபர்களிடம் ஒப்படைத்து வரும் மதுரை மாவட்ட போலீசார்..மதுரை மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கடந்த 03.08.2018ம் ஆண்டு போலீஸ் சைபர் கிளப் ஆரம்பிக்கப்பட்டது காவல் ஆய்வாளர். சார்மிங் S.ஒய்ஸ்லின் தலைமையில் 4 காவல் ஆளினர்கள் கொண்டு செயல்பட்டு வருகிறது. காவல் நிலையங்களில் பதிவான மொபைல் போன் திருட்டு மட்டும் தொலைந்த மொபைல் போன் வழக்குகளில் கடந்த மூன்று மாதங்களில் போலீஸ் சைபர் கிளப்பின் மூலம் ₹ 6,70,963/- மதிப்புள்ள 57 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். சுஜித் குமார் அன்று 20.10.2020 தேதியன்று உரிய நபர்களிடம்வழங்கப்பட்டது.மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரித நடவடிக்கையால் இதுவரை ₹ 31,04,281/- மதிப்புள்ள 266 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் வழங்கப்பட்டது.மேலும் வங்கிகளிலிருந்து பேசுவதாக கூறி பொதுமக்களின் வங்கி கணக்கு விபரங்களை தெரிந்து கொண்டு நூதனமாக முறையில் நடந்த திருட்டு வழக்குகளில் காவல் கண்காணிப்பாளர். துரித நடவடிக்கையால் கடந்த மூன்று மாதங்களில் 69,470/- மற்றும் இதுவரை ₹ 7,15,378 /- உரியவர்களுக்கு அவர்களுடைய வங்கிக் கணக்கு திரும்ப கிடைக்குமாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதுபோன்று மோசடியாக வங்கியிலிருந்து பேசுவதாக கூறி ஏமாற்றும் நபர்களிடம் விழிப்புணர்வுடன் இருக்கவும் ரகசிய எண், வங்கிகணக்கு, எண் , OTP போன்ற விபரங்களை முன்பின் தெரியாதவர்களிடம் கொடுத்து ஏமாற வேண்டாம் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
Like this:
Like Loading...
Related
You must be logged in to post a comment.