மதுரை திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத் திருவிழா நடத்த கோரி இந்து முன்னணியர் கோஷங்கள் ஆர்ப்பாட்டம் செய்தோர்கள் கைது

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருநாள் அன்று மலைமீதுள்ள உச்சிபிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்படும். இந்நிலையில் திருப்பரங்குன்றத்தின் உச்சியில் கார்த்திகை தீபம் திருவிழாவின் போது தீபம் ஏற்ற வேண்டும் கோரி இந்து முன்னணி மாநில தலைவர் காடேஷ்வரா சி. சுப்பிரமணியம் தலைமையில் அக்கட்சியினர் பதினாறுகால் மண்டபத்திலிருந்து திருப்பரங்குன்றம் கோயில் வாசல் வரை கோஷம் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறும்போது;பொதுச்செயலாளர் அரசு ராஜாவுடன் காசி விஸ்வநாதரை சாமி தரிசனம் செய்வதகற்காகத்தான் வந்தோம் ஆனால் காவல்துறை எங்களை தரிசிக்க அனுமதிக்க மறுப்பதாக கூறினார்.

தொடர்ந்து வருகிற 28-ஆம் தேதி கார்த்திகை மாதம் திருப்பரங்குன்றத்தில் மலைமேல் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் கோரி மிகப்பெரிய போராட்டம் நடைபெற உள்ளது.தமிழக அரசு உடனே தலையிட்டு மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு வழி செய்ய வேண்டும் இல்லையென்றால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும்.தமிழக அரசு நார்த்திக அரசாக செயல்படுவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.இந்துக்களுக்கு யார் ஆதரவாக உள்ளார்களோ அவர்களை என்றும் இந்து முன்னணி வரவேற்கும்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!