கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம் சென்னையில் உள்ள ASHOK LEYLAND, Hosur மற்றும் கல்லூரி வேலைவாய்ப்பு பிரிவு சார்பில் இறுதியாண்டு பயிலும் மின்னியல், மின்னணுவியல் மற்றும் கணிதத்துறை மாணவ, மாணவிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியின் துவக்க விழாவில் கல்லூரியின் முதல்வர் அலாவுதீன் தலையுரையாற்றினார். கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர் ஜெ.கணேஷ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். இந்நிகழ்வில் கல்லூரியின் பல்வேறு துறைத்தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும் கல்லூரியின் துணை முதல்வர்கள் சேக்தாவூது மற்றும் இராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக நிறுவனத்தின் துணை மேலாளர். வி.ஆர்.பாலசுப்ரமணியம் மற்றும் மேலாளர் ஆர்.இமானுல் ஆகியோர் தங்கள் நிறுவனத்தின் அமைப்பு மற்றும் உற்பத்தி செயல்பாடுகள் பற்றி விளக்கி கூறினர். மேலும் தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு ஊதியம் மற்றம் சலுகைகளை விரிவாக கூறி நேர்முக தேர்வினை நடத்தினர். பின்னர் மின்னணுவியல் முதுநிலை விரிவுரையாளர் எஸ்.மரியதாஸ் நன்றி கூறினார்.
மேலும் இந்த முகாமில் கலந்து கொண்ட 130கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஊதியம் ரூ.12,180/- மற்றும் உணவு, சீருடை வசதியுடன் வேலைக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டது.
செய்தி:- கார்த்தி, கீழக்கரை

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












