முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு இணைய மேம்பாடு குறித்த பணிமனை..

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு இணைய மேம்பாடு குறித்த பணிமனை 28/02/2020 அன்று காலை 10.00 மணியளவில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வை கல்லூரி முதல்வர் Dr.A.R.நாதிரா பானு கமால் நமது சமூகத்திற்காக ஆசிரியர்களும், மாணவிகளும் ஏதேனும் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் இணையத்தின் சிறப்பையும் இணைய வளர்ச்சியையும் எடுத்துரைத்து தலைமை உரையாற்றினார். சிறப்பு விருந்தினர் H.ஹசினா, கல்வி தலைவர், SRM இராமநாதபுரம் மாணவிகளுக்கு இணையத்தின் முக்கியத்துவத்தையும் இணையம் உபயோகிக்கும் முறையையும் எடுத்துரைத்தார். M.ஹாஜா அஜ்மீர்தின், மையத்தலைவர், SRM இராமநாதபுரம், இணையத்தின் மூலமாக கிடைக்கப்பெறும் வேலை வாய்ப்பை பற்றி எடுத்துரைத்தார்.

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு M.மகாலெட்சுமி கணினி அறிவியல் இரண்டாமாண்டு மாணவி பேசினார். இந்நிகழ்வை கல்லூரி அறிவியல் துறைகள் இணைந்து சிறப்பாக ஒருங்கிணைத்தார்கள்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!