முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 08/01/2019, 03.00 மணியளவில் சுயத்தொழில் முனைவோர் விழிப்புணர்வு தொடக்க விழா நடைப்பெற்றது. இந்த நிகழ்வு அரபித் துறைத்தலைவர் மு.ரெய்ஹானத்தில் அதவியா அவர்களின் இறைவணக்கத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து திருமதி.P.பிரியங்கா தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் வரவேற்புரை ஆற்றினார்.
அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் Dr. A.R.நாதிரா பானு கமால், தகவல் தொழில் நுட்பத்தின் மூலமாக சுயத்தொழில் செய்வதைப் பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் தலைமை உரையாற்றினார். அத்துடன் சிறப்பு விருத்தினர் இராமநாதபுர மாவட்ட தொழிற்மைய பொது மேலாளர் எம்.மாரியம்மாள் அவர்களுக்கு முகம்மது சதக் நிறுவனத்தின் சார்பாக நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்றைய சூழ்நிலையில் பெண்கள் சுயத்தொழில் தொடங்குவது பற்றியும், சுயத்தொழில் தொடங்க அரசு மற்றும் வங்கியில் பண உதவி எவ்வாறு பெறுவது,அதன் உக்திகள் பற்றியும் விளக்கினார். இதனை “இலட்சியம் இல்லாத வாழ்க்கை முகவரி இல்லாததைக்கு சமம்” என்று சிறப்புரை வழங்கினார். இறுதியாக வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் முதலாமாண்டு மாணவி D.சரணி நன்றியுரை வழங்கியதுடன் நிகழ்வு இனிதே முடிவடைந்தது.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print
















