முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 23/02/2019, காலை 10.00 மணியளவில் இந்தியன் ரெட்கிராஸ் மற்றும் யூத் ரெட்கிராஸ் இணைந்து நடத்திய எரிபொருள் சிக்கனம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியினை ஆங்கிலத் துறையைச் சார்ந்த முதலாமாண்டு மாணவி M.ரவ்லத்தூல் ஜன்னா இறைவணக்கத்துடன் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் Dr. A.R.நாதிரா பானு கமால் வரவேற்புரை ஆற்றினார்.
பின்னர் சிறப்பு விருந்தினருக்கு முகம்மது சதக் நிறுவனத்தின் சார்பாக நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. அத்துடன் ரெட்கிராஸ் சார்பாக தகவல் தொழில் நுட்ப முதலாமாண்டு மாணவி K.ஸ்ரீவர்ஷினியில் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. ரெட்கிராஸ் தலைவர் S.ஹாருன், பொருளாளர் C.குனசேகரன், புரவலர் M.தேவி உலகராஜ் மற்றும் செயலாளர் M.ரக்லண்ட் மாதுரம் ஆகியோர் தலைமையில் A.முனிஸ்வரி ME, M.B.A, கேஸ் மற்றும் பெட்ரோலியம் விழிப்புணர்வு பேச்சாளர் பெண்கள் எரிபொருள் சிக்கனமாகவும் பாதுகாப்புடனும் பயன்படுத்த வேண்டும் என்றும் அவற்றின் நன்மை தீமை பற்றியும் விரிவாக எடுத்துரைத்து சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாணவிகள் மற்றும் மாணவிகளின் பெற்றோரும் கலந்துக் கொண்டு இந்நிகழ்வை மேலும் சிறப்பித்தனர். இறுதியாக தகவல் தொழில் நூட்ப துறைத் தலைவர் மற்றும் யூத் ரெட்கிராஸ் ஒருங்கினணப்பாளர் P.பிரியங்கா நன்றியுரை வழங்க இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது.











You must be logged in to post a comment.