கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் பணிநியமன ஆணை வழங்கும் விழா மற்றும் இந்திய தொழில்நுட்பக்கழக மாணவர் கூட்டமைப்பு துவக்க விழா சதக் அறக்கட்டளை இயக்குநர்கள் ஹபீப் முஹம்மது மற்றும் அஸ்லம் தலைமையிலும்,கல்லூரி டீன் முஹம்மது ஜஹுபர் மற்றும் கல்லூரி முதல்வர் அப்பாஸ் மைதீன் முன்னிலையிலும் நடைபெற்றது.

கல்லூரி துணை முதல்வரும், கட்டிடக்கலை துறைத் தலைவியுமான முனைவர். ஆழகிய மீனாள் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக புதுதில்லி, “இந்திய தொழில்நுட்பக்கழக கூட்டமைப்பின் துணை தலைவர் மணிவண்ணன்” கலந்து கொண்டு கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி இந்திய தொழில்நுட்பக்கழக மாணவர் கூட்டமைப்பை துவக்கி வைத்து, இக்கல்லுலூரி முன்னாள் மாணவர்கள் பல துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள் அது போல் நீங்களும் பல துறைகளில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன். மாணவர்களாகிய நீங்கள் இளநிலை படிப்புடன் நின்றுவிடாமல் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை படித்து அதன்மூலம் பலவித தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து தங்கள் கல்லூரிக்கு ஆராய்ச்சி அமைப்பு பெறுவதற்கு உதவியிடுமாறு அறிவுரை வழங்கினார்.

இந்த பணிநியமன ஆணை வழங்கும் விழாவில் 424 மாணவர்களுக்கு பல்வேறு கம்பெனிகளில் இருந்து குறிப்பாக (Study springs pvt ltd., Scientific publishing services pvt ltd., Hwashin automotive india pvt ltd., E-care india pvt ltd., DEC infrastructures, ADI – MPS ltd.,) கம்பெனிகளைச் சார்ந்த மனிதவள மேம்பாட்டு அதிகாரிகளால் பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

அண்ணாபல்பலைக்கழக தரவரிசை பட்டியல் அளவில முதலிடம் பிடித்த மாணவர்களுக்கும் கல்லூரியின் ஒவ்வொரு துறையிலும் கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளக்கிய 215 மாணவர்குளுக்கு சான்றிதழ்களை முஹம்மது சதக் அறக்கட்டளை இயக்குனர்கள் ஹபீப்முஹம்மது மற்றும் அஸ்லம் ஆகியோரால் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இயந்திரவியல் துறைத் தலைவர் கனகசுந்தரம் நன்றியுரை வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு அதிகாரி ராஜகுபேந்திரன் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் நஜ்முதீன் ஆகியோர் செய்திருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









