கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் இயந்திரங்கள் பயன்பாட்டின் சிறப்புகள் பற்றிய ஒரு நாள் கருத்தரங்கம்.

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல், பொறியியல் துறை சார்பாக இன்றைய சூழ்நிலையில் வாகன இயந்திரங்கள் பயன்பாட்டின் சிறப்புகள் பற்றிய ஒரு நாள் கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் முனைவர் அப்பாஸ் மைதீன் தலைமையிலும் கல்லூரி டீன் முனைவர். முஹம்மது ஜஹாபர் முன்னிலையிலும் நடைபெற்றது.

​இயந்திர பொறியியல் துறைத்தலைவர் முனைவர் கனகசுந்தரம் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் தனது தலைமையுரையில் ஒவ்வொரு புதிய படைப்புகளும் படைப்பாளியின் சிந்தனையில் ஏற்படும் உந்துதல் மூலமே உருவாகிறது எனவே மாணவர்கள் தங்கள் சிந்தனைகளை புதிய படைப்புகளை உருவாக்குவதற்கு வேண்டிய முயற்சிகளை கல்லூரியில் படிக்கும் போதே செயல்பட்டு நாட்டின் பயன்பாட்டிற்கு புதிய படைப்புகளை உருவாக்குவதற்கு பாடுபட வேண்டுமென தெரிவித்தார்.

​சிறப்பு விருந்தினராக ஆந்திர மாநிலம் அனந்தபூர், ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழக இயந்திரவியல் துறைத் தலைவரும் பேராசிரியருமான முனைவர். துர்கா பிரசாத் கலந்து கொண்டு இன்றை சூழ்நிலையில் வாகன இயந்திரங்கள் பயன்பாட்டின் சிறப்புகள் பற்றி ஆதார விளக்கப்படங்களுடன் விளக்கினார்.

​மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பைக், கார், பஸ், ரயில், விமானம், கப்பல் போக்குவரத்துக்களில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள் அத்தியாவசியமான ஒன்று. அதற்கு புதுப்புது கண்டுபிடிப்புகளை பயன்படுத்தி அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் இலக்கை அதிவிரைவில் அடைவதற்கு தேவையான வழிமுறைகளை கையாண்டு அந்த துறையில் சிறந்து விளக்க வேண்டுமென தெரிவித்தார். எங்களது பல்கலைகழகத்தில் மாணவர்களுக்கு ஆராய்ச்சியுடன் கூடிய கண்டுபிடிப்புகளுக்கு ஆராய்ச்சி மையம் உள்ளது. முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மாணவர்கள் படிக்கும் பொழுது அந்தந்த துறைகளில் தீவிர பயிற்சிக்கு எங்களது பல்கலைகழகத்தில் வழிவகை செய்து தருகிறோம் என தெரிவித்தார்.

​நன்றியுரை இயந்திரவியல் துறை துணைப் பேராசிரியர் மயில்வேல் நாதன் வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி துணை முதல்வர் முனைவர் அழகிய மீனாள், இயந்திரவியல் துறை துணை பேராசிரியர்கள் ஜெயசீலன், ராஜேஸ்வரன் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் நஜ்முதீன் ஆகியோர் செய்திருந்தனர்.​

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!