கீழக்கரை சதக் பொறியியல் கல்லூரி வேதிபொறியியல் துறை மாணவர்களுக்கு மத்திய அரசின் ஊக்கத் தொகை..

கீழக்கரை சதக் பொறியியல் கல்லூரி வேதிபொறியியல் துறை மாணவர்கள் இந்த மாதம் 1 மற்றும் 1ம் தேதி மனிதவள மேம்பாட்டு துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட SMART INDIA – HACKOTHAN 2017 என்ற  தேசிய அளிவளான திறனாய்வு போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.  இந்த நிகழ்வின் போது பாரத நாட்டின் பிரதமர் மோடி காணொளி காட்சியமைப்பின் மூலம் பங்கேற்ற மாணவர்களுக்கு அறிமுக உரையாற்றி ஊக்கப்படுத்தும் அறிவுரைகளை வழங்கினார்.

அத்திறனாய்வு போட்டியில் பங்கேற்ற சதக் பொறியியல் கல்லூரி வேதிபொறியியல் துறை மாணவர்கள் ஆறு பேருக்கு அவர்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக மத்திய இரசாயணத்துறை சார்பாக ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டது.  அவ்வாறு அறிவிக்கப்பட்ட ஊக்கத் தொகை மற்றும் பங்ளிப்புக்கான நற்சான்றிதழ்களை அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தின் (ALL INDIAN COUNCIL FOR TECHNICAL EDUCATION – AICTE) தலைவர்.முனைவர் அனில் சகஸ்ரபத்தே மாணவர்களுக்கு வழங்கி கவுரவித்தார்.

மத்திய அரசால் கவுரவிக்கப்பட்ட மாணவர்களை கல்லூரி நிர்வாகத்தினர், டீன், கல்லூரி முதல்வர், வேதிபொறியியல் துறை தலைவர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!